alltamil
HomeMP3 SongsCinemaGamesProductScienceReview

Science & Technology

Science2
Science3
Science4
Science5
Science6

மரபணு ஒற்றுமை

நம்முடைய மரபணுக்களில் 99 விழுக்காடு எலிகளிடமும் உள்ளதாம். எலிகளின் ஜீன் எனப்படும் மரபணுக்கள் மட்டுமல்ல, நோய்கள் உண்டாகும் முறையும், எலிகளின் பழக்கவழக்கங்களும் மனிதர்களுடையதைப் போல் இருக்கின்றன என்கிறார்கள்.சுமார் 7 கோடி ஆண்டுகளுக்கு முன்பு எலிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒரே மூதாதையர்தான் இருந்திருக்கிறார்கள். அதன் பிறகு தான், வெவ்வேறு பரிணாம திசையில் வளர்ச்சி பெறத் தொடங்கி விட்டோம். இப்படிப்பட்ட நிலையில் மனிதகுலத்தின் மரபணு ரகசியங்களைப் புரிந்து கொள்வதற்கான ஆராய்ச்சி வாகனமாக எலிகள் ஆக்கப்படுகின்றன.எலிகளின் மரபணு அமைப்பை உருவாக்கும் 20000 ஜீன்கள் ஒவ்வென்றும் வரிசைப்படுத்தப்பட்டு விட்டன. எலிகள் மற்றும் மனிதர்களின் மரபணுக்களின் டி என் ஏ வரிசை மட்டுமே இதுவரை இவ்வளவு துல்லியமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. சரி, இந்த யூரோமவுஸ் திட்டம் எவ்வாறு நிறை வேற்றப்படும் ? யூரோமவுஸ் திட்டத்தின் கீழ் BளாCK௬ எனப்படும் எலியின் மரபணு பயன்படுத்தப்படுகிறது. இந்த BளாCK௬ எலிகளின் கருவை, விஞ்ஞானிகள் வெளியே எடுத்து, அதில் உள்ள ஒரு ஜீனை சிதைத்து அல்லது திருத்தி, பிறகு மரபணு திருத்தப்பட்ட கருவை திரும்பவும் கருப்பைக்குள் வைத்து புதிய எலிவகையை உருவாக்குவார்கள். அவை ஒவ்வொன்றிலும் சிதைக்கப்பட்ட ஒற்றை மரபணு மட்டுமே இருக்கும். இதே முறைப்படி எலியின் 20000 ஜீன்களும் சிதைக்கப்படும். கடைசியில், ஒவ்வொன்றும் வித்தயாசமான, சிதைக்கப்பட்ட ஜீனைக் கொண்ட, எலியின் 20000 ஜீன்கள் கிடைக்கும். இவ்வாறு மரபணு சிதைக்கப்படுவதால், எலியின் தோற்றத்திலும் பழக்கவழக்கங்களிலும் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்பது ஆராயப்படும். இவ்வாறாக எலியின் ஒவ்வொரு ஜீனும் எவ்வாறு செயல்படுகிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்து, அதிலிருந்து, அதற்கு நிகரான மனித ஜீன் என்ன செய்கிறது என்பதைக் கண்டறிவார்கள்.

அதே வேளையில், வெவ்வேறு மரபணு சேர்க்கைகளினால், வெவ்வேறு மனிதர்களிடம் என்ன விளைவு உண்டாகிறது என்பதையும் விஞ்ஞானிகள் அறிய விரும்புகின்றனர். ஏனென்றால் மனிதர்களைப் பாதிக்கும் முக்கிய நோய்கள் ஒற்றை ஜீனால் ஏற்படுவதில்லை. ஜீன்களில் குழுக்களால் சேர்க்கையால் உண்டாகின்றன. மேலும், சுற்றுச்சூழல் காரணங்களும் இதில் சம்பந்தப்பட்டுள்ளன. ஆகவே, இன்றைக்கு நாம் பயன்படுத்தும் மருந்துகளை உருவாக்குவதற்கு எலி ஆராய்ச்சி மிக முக்கியமாகத் தேவைப்படுகிறது. இப்போது தான் எலியின் ஆய்வில் இருந்து நம்மைப்பற்றிக் கற்கத் தொடங்கியுள்ளோம். பாஸ்ட்டன் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் ஒரு எலியின் மீது மனித செவியை வளர்த்துள்ளனர்.இதனால் அந்தப் பெருச்சாளிக்கு பாதகம் எதுவும் ஏற்படவில்லை. இதே நுட்பத்தைப் பயன்படுத்தி, மனிதர்களுக்காக மூக்குகளையும், செவிகளையும் மீண்டும் வளர்ப்பதே இதன் நோக்கம்.


Your Ad Here